லா லிகா தொடர்: றியல் வெற்றி!
Sunday, September 24th, 2017
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், இடம்பெற்ற போட்டியொன்றில், 3-1 என்ற கோல் கணக்கில், றியல் சொஸைடட் அணியை றியல் மட்ரிட் வென்றுள்ளது.
றியல் மட்ரிட் சார்பாக, பொர்ஜா மயோரல், கரித் பேல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, கெவின் றொட்றிகாஸின் “ஓவ்ண் கோல்” மூலம் ஒரு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது. றியல் சொஸைடட் சார்பாகப் பெறப்பட்ட கோலையும் கெவின் றொட்றிகாஸே பெற்றிருந்தார்.
இப்போட்டியின் முடிவில், எட்டுப் புள்ளிகளுடன் லா லிகா தரவரிசையில், நான்காமிடத்தில், நடப்பு லா லிகா சம்பியன்களான றியல் மட்ரிட் காணப்படுகிறது. 12 புள்ளிகளுடன் முதாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகிறது.
Related posts:
ஐ.பி.எல் தொடர்: ஏலம் போகாத பிரபல வீரர்கள்!
அதிகம் பேசக்கூடாது : புரிந்துகொண்டேன் என சொல்கிறார் விராட் கோஹ்லி!
தென்னாபிரிக்கா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஓய்வு!
|
|
|


