ரோகித் சர்மாவை ஓரங்கட்டும் பாண்ட்யா!
Friday, October 27th, 2017
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான பாண்ட்யா 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என மொத்தம் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
இப்போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்த ஆண்டிற்கான அதிக சிக்ஸர்கள் அதவாது 30 சிக்ஸர்கள் அடித்து சாதித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஆரம்ப வீரர் ரோகித் சர்மா 31 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து பாண்ட்யா இரண்டாவது இடத்தில் உள்ளார்.மேலும் இப்பட்டியலில் இங்கிலாந்து வீரர்களான மோர்கன் (26 சிக்சர்கள்), பென் ஸ்டோக்ஸ் (24), கோஹ்லி (21) ஆகியோர் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
மலிங்கவை விட வேகமாக பந்து வீசுவென் - சவால் விடும் விஜயராஜ்!
சிறையிலிருந்து விடுபட்டது போல் இருந்தது - ரவிசாஸ்திரி!
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை !
|
|
|


