ரோகித்-கோஹ்லி அதிரடி: கடைசி ஓவரில் வெற்றி பெற்றது இந்தியா!

Monday, October 30th, 2017

இந்தியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து, ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் சமபலத்துடன் களமிறங்கின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் களம் இறங்கினார்கள்.தவான் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.52 பந்தில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா 106 பந்தில் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோஹ்லியும் 59 பந்தில் அரைசதம் கடந்தார்.அதன்பின் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால அணியின் எண்ணிக்கை மளமளவென எகிறியது.அணியின் எண்ணிக்கை 259 ஓட்டங்களாக இருந்த போது ரோகித் சர்மா 138 பந்தில் 147 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஜோடி 230 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.அடுத்து வந்த ஹார்திக் பாண்ட்யா 6 பந்தில் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோஹ்லி 106 பந்தில் 113 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.அடுத்து வந்த அதிரடி வீரர் டோனி 17 பந்தில் 25 ஓட்டங்கள் குவிக்க, இந்திய அணி .50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் சவுத்தி, மில்னே, சான்ட்னெர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.அதன் பின் 338 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (10) சொதப்பலான துவக்கம் அளித்தார்.

Related posts: