‘ரொனால்டோ அபாரம் – ரியல் மாட்ரிட் வெற்றி!
Monday, March 5th, 2018
லா லிகா தொடரில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபார ஆட்டத்தினால், ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் கெடாஃப் அணியை வீழ்த்தியுள்ளது.
லா லிகா தொடரில் ஒரு ஆட்டத்தில், ரியல் மாட்ரிட் மற்றும் கெடாஃப் அணிகள் நேற்று மோதின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில், ரியல் மாட்ரிட்டின் பேலே முதல் கோலை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் ரொனால்டோ 45வது நிமிடத்தில் இரண்டாவது கோலை பதிவு செய்தார். ஆனால், கெடாஃப் அணியின் போர்ட்டிலோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, 65வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
அதன் பின்னர், 78வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Related posts:
தகுதி சுற்றில் அர்ஜென்டினா வெற்றி!
நிலநடுக்கம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கும் நவீனு முறைமை உருவாக்கம்!
விளையாட்டின் மகிமையை உலகுக்கு மீட்டிக்காட்டியது டோக்கியோ ஒலிம்பிக்!
|
|
|


