ரொசேன் சில்வா சர்வதேச டெஸ்ட் தரப்படுத்தலில் முன்னேற்றம்!

Wednesday, February 14th, 2018

இலங்கை அணியின் ரொசேன் சில்வா (Roshen Silva) சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய டெஸ்ட் தரப்படுத்தலுக்கமைய முன்னேறி முதல் 50 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இந்த முற்னேற்றம் பங்களாதேஸ் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறந்த துடுப்பாட்டத் தன்மையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் ரொசேன் சில்வா 29 இடங்கள் முன்னேறி 49வது இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டிவன் சுமித் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: