ரியோ ஒலிம்பிக்: சைக்கிளோட்டப் போட்டி நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு சத்தம்!  

Sunday, August 7th, 2016

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் சைக்கிளிங் போட்டி நடைபெற்று வரும் இடம் இருகே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆடவர் பிரிவிற்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்ற ரேஸ் கோர்ஸ் சாலையில் பினிஷிங் லைன் அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்த பரபரப்பு காரணமாக சைக்கிளிங் போட்டிக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

தீவிரவாதிகள் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என அச்சுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: