ரஷ்யவீரரின் குடும்பமே வைத்துக்கொள்ளட்டும்- மல்யுத்த வீரரின் பெருந்தன்மை!

Thursday, September 1st, 2016

ரஷ்யமல்யுத்த விரர் பெசிக்குடுகோவ் குடும்பமே வெள்ளிப்பதக்கத்தை வைத்துக்கொள்ளட்டும் என இந்திய மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட ரஷ்யாவின் பெசிக் குடுகோவ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது பெசிக் உள்லிட்ட 6 மல்யுத்த வீரர்களிடம் இருந்து ரத்த மாதிரியை சேகரித்து வைத்திரிந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, தற்போது ரியோ ஒலிம்பிக்கின் முன்னதாக சோதனை செய்துள்ளது.அதில் ரஷியவீரர் பெசிக்குடுகோவ் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்ததை அடுத்து அவரது வெள்ளி பதக்கத்தை ஒலிம்பிக் கமிட்டி பறிமுதல் செய்தது.

இதனால் லண்டன் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற யோகேஸ்வர்க்கு வெள்ளி பதக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக டுவிட்டரில் யோகேஸ்வர் தத் கூறியதாவது, ரஷ்ய மல்யுத்த வீரர் குடுகோவ் மிகச்சிறந்த மல்யுத்த வீரர். ஒரு மல்யுத்த வீரராக நான் அவரை மதிக்கிறேன். முடிந்தால் அவர் வாங்கிய பதக்கத்தை அவரது குடும்பமே வைத்துக்கொள்ளட்டும். அது அவருடைய குடும்பத்தின் மரியாதையை காப்பாற்றும். எனக்கு மனிதாபிமானம் தான் முக்கியம் என பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்

Related posts: