யூன் 2ஆம் திகதி மெஸ்ஸி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்!
Monday, May 30th, 2016
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி வரி ஏய்ப்பு புகாரில் எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
கால்பந்து களத்தில் கலக்கும் மெஸ்ஸி, விளம்பர உலகிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2007-2009ம் ஆண்டு வரை அவர் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என்று ஸ்பெயினில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் ரூ.31.46 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பார்சிலோனாவில் உள்ள கேடாலோனியா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மெஸ்ஸி விசாரணைக்காக எதிர்வரும் யூன் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்க வீரர்களுக்கு 10 மாத தண்டனை!
இலங்கை கிரிக்கெட் அணிக்கு முகாமையாளர் நியமனம்!
இறுதிநாள் ஆட்டம் இன்று!
|
|
|


