யூனிஸ்கானின் அபார இரட்டைச் சதம்! வலுவான நிலையில் பாகிஸ்தான்!!
Saturday, August 13th, 2016
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மொயீன் அலியின் சதத்தால் முதல் இன்னிங்சில் 328 ரன்கள் குவித்தது. பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ஆசாத் ஷபிக், யூனிஸ்கான் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பிராஷ் கான் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். யூனிஸ்கான் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.யூனிஸ்கான் 204 ரன்னுடனும் களத்தில் உள்ளார். சற்றுமு பாகிஸ்தான் அணி 8 இலக்ககள் இழப்பிற்கு 496 ஓட்டங்களை பெற்று ஆடிவருகின்றது.
Related posts:
|
|
|


