யாழ்ப்பாணப் பல்கலை அரையிறுதிக்குத் தகுதி!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்குஎ இடையிலான துடுப்பாட்டத் தொடரின் காலிறுதி ஆட்டம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியை எதிர்த்து வயம்ப பல்கலைக்கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி 48.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக துவாரகசீலன் 19 ஓட்டங்களையும் தாரக 19 ஓட்டங்களையும் டனுசன் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வயம்ப பல்கலைக்கழக அணியின் சார்பில் ஏ.டில்சான் பெர்னான்டோ, நுவான், கவின்ட, மடுசங்க, ஆர்.டில்சான் ஆகியோர் ஒவ்வொரு இலக்கையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வயம்ப பல்கலைக்கழக அணி 43.5 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றபோது மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதனால் டக்வேர்த்லூயிஸ் முறைப்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்று அரையிறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
அதிகபட்சமாக சமுத் 22, டஜன் 22, கவின்ட 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சார்பில் லோகதீஸ்வர் 4 இலக்குகளையும் துவாரகசீலன், சங்கா ஆகியோர் ஒவ்வொரு இலக்கையும் கைப்பற்றினர்.
Related posts:
|
|