மொயின் அலி சாதனை!

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 239 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது
போட்டியில் இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்சில் 353 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இனிங்சில் 175 ஓட்டங்களையும் பெற்றது
இந்தநிலையில் தமது இரண்டாது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது
இந்தநிலையில் 492 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 252 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஹெட்ரிக் சாதனை புரிந்தார்
இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் 77 வருடங்களுக்கு பின்னர் ஹெட்ரிக் பெறும் முதலாவது சந்தர்ப்பமாக அது அமைந்தது
இந்த நிலையில் நான்கு போட்டிகளைக் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி மெஞ்செஸ்டரில் இடம்பெறவுள்ளது
Related posts:
|
|