மேற்கிந்திய டெஸ்ரிலிருந்து துஷ்மந்த சமீர நீக்கம்!
Tuesday, April 10th, 2018
காயத்திற்கு உள்ளாகிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மேற்கிந்திய சுற்றுப் பயணத்தின் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருந்த சூப்பர் 04 கிரிக்கெட் போட்டியின் கொழும்பு – காலி அணிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் காயத்திற்கு உள்ளாகியிருந்தார் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர.
குறித்த சுற்றுப்பயணத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் 03 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளது. இதன் முதலாவது போட்டியானது ஜூன் மாதம் 06ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
700 இலக்குகளை வீழ்த்துவார் லையன் - ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர்!
ஆஸி. அணியிலிருந்து முன்னணி வீரர்கள் பலர் நீக்கம்!
“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடர் - அதிக அடிப்படை விலையில் மாலிங்க!
|
|
|


