மெஸ்ஸியின் 50 ஆவது சர்வதேச கோல்

Thursday, March 31st, 2016
பொலிவியாவிற்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி தனது 50 ஆவது சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயினில் உள்ள கார்வடோ நகரில் கடந்த (29) நடைபெற்ற போட்டியின் போது மெஸ்ஸி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
பொலிவியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில், 30 ஆவது நிமிடத்தில் ‘ஸ்பாட்-கிக்’ மூலம் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார் மெஸ்ஸி.
இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து உலகக்கிண்ணப் போட்டிக்கு அந்த நாடு தகுதி பெற்றுள்ளது.
28 வயதே ஆகும் மெஸ்ஸி ‘கிளப்’ மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 499 கோல்கள் அடித்துள்ளார்.
எஃப்.சி பார்ஸிலோனா கிளப்புக்காக விளையாடி வரும் மெஸ்ஸி இந்த வார இறுதியில் ரியல் மட்ரீட் அணிக்கு எதிரான போட்டியின்போது 500 ஆவது கோல் அடித்து சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜென்டினா அணி சார்பில், கஃப்ரியேல் பாட்டிஸ்டூட்டா 56 சர்வதேச கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தை மெஸ்ஸி தற்போது பிடித்துள்ளார். கால்பந்து ஜாம்பவான் மரடோனா 34 சர்வதேச கோல்களை அடித்துள்ளார்.

Related posts: