முரளியிடம் ஆலோசனை..!
Friday, May 27th, 2016
அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அசத்த முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனைகளை பெற முடிவு செய்துள்ளார்.
எதிர்வரும் யூலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட முத்தையா முரளிதரனின் உதவியை நாடியுள்ளார் நாதன் லயன்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்திய துணைக் கண்டத்தில் எப்படிபந்து வீச வேண்டும் என்று முரளி எனக்கு தெரிவித்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற காத்திருக்கிறேன். அவரிடம் பயிற்சி பெற முடிந்தால் அது களத்தில் சாதிக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாதன் லயன் தற்போது வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்த அவருக்கு இன்னும் 5 விக்கெட்டுகளே தேவை என்ற நிலையில், இந்த மைல்கல்லை எட்டும் முதல் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற ஆவலுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


