முரளிதரன் பந்தை சமாளிக்க கஷ்டப் பட்டேன்! – கில்கிறிஸ்ட்
Sunday, April 10th, 2016
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முரளிதரன், ஹர்பஜன் சிங் ஆகியோரின் பந்தை சமாளிக்க சிரமப்பட்டதாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவுஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடினார்.அப்போது அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசுகையில், “முத்தையாக முரளிதரன், ஹர்பஜன் சிங் இருவரும் எப்போதும் எதிரணிக்கு சவாலாகவே இருப்பர்.
முரளிதரன் என்ன பந்துவீசுகிறார் என்பதை என்னால் எளிதில் கணிக்கவே முடியாது. அவர் எப்போதும் என்னை 10 வயது குழந்தையாகவே நினைக்க வைப்பார்.என்னைப் போலவே மைக் ஹஸியும் முரளிதரன் பந்தில் திணறக் கூடியவரே. ஒரு போட்டியில் அவர் துடுப்பெடுத்தாட களமிறங்கினார். அப்போது முரளிதரன் பந்தில் அப்படி திணறினார்.
டெஸ்ட் போட்டிகளில் முரளிதரன் பந்தை உணவு இடைவேளை வரை கூட சமாளிக்க முடியாது. அவ்வளவு கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


