முதல் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்!

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் மகுடம் பாகிஸ்தான் அணிக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த மகுடம் லாஹுரில் உள்ள கடாபி மைதானத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சனால் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா ஹுல் ஹக்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-2 என்ற ரீதியில் சமப்படுத்தியதன் மூலம் குறித்த மகுடத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இதேவேளை நீண்ட நாட்களாக முதலாவது இடத்தில் இருந்த ஆஸி அணி இலங்கை அணியுடன் பெற்ற தோல்வியின் காரணமாக டெஸ்ட் மகுடத்தை பெற தவறியுள்ளது.பாகிஸ்தான் அணி முதற் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணி!
ரொனால்டோவுக்கு கை காட்டியது யார்?
ஆசியக் கிண்ணம்: இலங்கை அணி தோல்வி!
|
|