முதல் உலகக்கிண்ணத்தை கைப்பற்றுமா போர்த்துக்கல்!
Thursday, June 14th, 2018
உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றில் “பி” பிரிவில் இடம்பிடித்த போர்த்துக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் 0:2 என்ற கோல் கணக்கில் சுவிற்சர்லாந்திடம் தோல்வி கண்டது. ஆனால் அதன் பின்னர் விளையாடிய 9 ஆட்டங்களிலும் வெற்றியைக் குவித்து 27 புள்ளிகளுடன் எந்தவித சிரமமும் இல்லாமல் ரஷ்ய உலகக் கிண்ணத் தொடருக்குள் நுழைந்தது.
தகுதிச் சுற்று ஆட்டங்களில் 32 கோல்கள் அடித்த போர்த்துக்கல் அணி வெறும் 4 கோல்களை மட்டுமே வாங்கியது. அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்ரியானோ ரொனால்டோ, ஆந்த்ரே சில்வா கூட்டணி 24 கோல்களை அடித்து மிரளச் செய்திருந்தது.
ஐரோப்பியச் சம்பியன்
கடந்த 2014 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சான்டோஸ் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு போர்த்துக்கல் அணி இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடி 20 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதிலும் முக்கியமாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்துத் தொடரில் சம்பியன் கிண்ணம் வென்றது போர்த்துக்கல் அணியின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கி உள்ளது.
ரொனால்டோ எனும் இமயம் –
2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் போர்த்துக்கல் அணி 2 ஆட்டங்களில் மட்டுமே உபகாலமாக போர்த்துக்கல் அணி தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதால் புதிய படைப்பாற்றல் இல்லாமல் உள்ளது. சென்டர் பேக் பொசிசனில் விளையாடக்கூடிய 35 வயதான பெபெ, உலகக்கிண்ணத் தொடரில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். அவருடன் புரூனோ ஆல்வ்ஸ் (வயது36), ஜோஸ் போன்டி(வயது34) ஆகியோர் இணைந்து செயற்பட வாய்ப்புள்ளது. விங்கரான ரிக் கார்டோ குரேசிமாவும் (வயது34) சிறந்த பங்களிப்புச் செய்யக்கூடும். கடந்த 4 வருடங்களில் அணியில் உள்ள மற்ற வீரர்களைவிட இவர்தான் கோல் அடிக்க அதிகளவில் உதவி புரிந்துள்ளார்.
நட்சத்திர வீரரான ரொனால்டோ தேசிய அணிக்காக இதுவரை 148 ஆட்டங்களில் விளையாடி 81 கோல்கள் அடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு யூரோ கிண்ணத்தை போர்த்துக்கல் அணி வென்றதில் ரொனால்டோ முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். தொழில் ரீதியான ஆட்டங்களில் ரியல் மட்ரிக் அணிக்காக அற்புதமாக விளையாடும் ரொனால்டோ, முதன்முறையாக தேசிய அணிக்காக பெரிய அளவிலான தொடரில் சம்பியன் பட்டம் வென்று கொடுத்தது அனைவரையும் சற்று வியக்க வைத்திருந்தது. 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ள 33 வயதான ரொனால்டோ இம்முறை தேசத்தின் கனவை நிறைவேற்ற சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஆனால் உலகக்கிண்ணத் தொடர்களில் ரொனால்டோ இதுவரையிலும் பெரியளவில் சோபித்தது இல்லை. 2006, 2010, மற்றும் 2014 என மூன்று உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 13 ஆட்டங்களில் வெறும் 3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார். தொழில் ரீதியான ஆட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது அவரது தர நிலைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியதுதான்.
தொழில் ரீதியான ஆட்டங்களில் ரொனால்டோ இந்த சீசனில் பிரி கிக்கில் சோபிக்கவில்லை. அதாவது பொக்ஸீக்கு வெளியே வைத்து பந்தை அவர் உதைத்ததில் ஒருமுறை கூட கோல் விழவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கக்கூடிய விடயம்தான். ஆனால் அதேவேளையில் ஜீவெண்டஸ் அணிக்கு எதிரான காலிறுதியில் “பைசைக்கிள் கிக்” முறையில் கோல் அடித்து அனைவரையும் திகைக்க வைத்தார். உலகின் சிறந்த வீரர் என்ற புகழைப் பெற்ற ரொனால்டோவுக்கு உலகக்கிண்ணம் என்பது இதுவரை எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இந்தச் சோகத்துக்கு அவர் இம்முறை முடிவுகட்ட முயற்சிக்கக்கூடும்.
Related posts:
|
|
|


