முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் குப்தில்!
Wednesday, March 21st, 2018
இங்கிலாந்துக்கு எதிரான நியூசிலாந்து அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் குப்தில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. இதில் நியூசிலாந்துஅணியில் மார்ட்டின் குப்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டியில் காயமடைந்த ரோஸ் டெய்லருக்கு பதிலாகவே மார்ட்டின் குப்தில் அணியில் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பதவி விலகுவதான செய்தி பொய் - அசங்க குருசிங்க!
மத்தீயூஸ் , சந்திமாலை பாராட்டிய பயிற்றுவிப்பாளர்!
சர்வதேச கிரிக்கட் பேரவை நிறைவேற்று அதிகாரிகள் சந்திப்பு!
|
|
|


