முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பெண்கள் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பெண்கள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் முதலாவது போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
Related posts:
தொடர் தோல்வியிலிருந்து மீண்டது புனே!
அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக ஹரிஸ்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான வடமாகாண கிரிக்கெட் அணி!
|
|