முகமது ஹபீஸ் பந்துவீச ஐசிசி தடை – ஐ.சி.சி!
Saturday, November 18th, 2017
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது ஹபீஸிக்கு பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் பவுலிங் செய்த போது சர்ச்சைக்குரிய முறையில் பந்து வீசுவதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதன் காரணமாக கடந்த 2015 யூலை மாதம் ஹபீஸுக்கு 12 மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிக்கப்பட்டது.பின்னர் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி பங்கேற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இவரது பந்துவீச்சு ஆக்ஷனில் சர்ச்சை எழுப்பப்பட்டது.
இதனால், தற்போது இவரது பவுலிங் ஆக்ஷனை ஐசிசி சோதனை செய்தது.இதில் ஹபீஸ் கை, பந்து வீசும் போது அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியை விட அதிகமாக இருப்பது உறுதியானது, இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது.
Related posts:
முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட் காப்பாளர் பணி பறிப்பு!
இராட்சத டைனோசரின் கால்தடம் கண்டுபிடிப்பு!
எதிர்வரும் வியாழனன்று இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி!
|
|
|


