முகமது ஷமிக்கு வைக்கப்பட்ட செக்!
Wednesday, April 18th, 2018
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்ற முகமது சமி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமி மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பொலிசில் புகார் அளித்தார். சமி அவரது சகோதரர், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் மறுத்த சமி, ஜகான் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இந்நிலையில் ஜகான் கொடுத்த புகாரின் அடிப்படையில் சமி மீது கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கொலை முயற்சி, குடும்ப வன்முறை, குற்றசதி, காயப்படுத்துதல், பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்ற சமியை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Related posts:
|
|
|


