மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வர்ணனையாளர் மார்க் நிக்கலஸ் !

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான மார்க் நிக்கலஸ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடிவயிற்றில் வலி காரணமாக கடந்த திங்கட்கிழமையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கோலஸ் மருத்துப பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டத்தில் வர்ணனையாளராக இணைந்து கொண்டார்.எனினும் மீண்டும் அவருக்கு வயிறு வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விராட் கோலி முதலிடம்!
பளுதூக்கல்: தங்கத்தை வென்றார் ஆசிகா!
ஆட்ட நிர்ணய சதி : இலங்கையின் 3 வீரர்கள் தொடர்பில் விசாரணை - சர்வதேச கிரிக்கட் பேரவை!
|
|