மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை!

அடுத்த ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த போது இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தனர்.
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிறகு எந்தவொரு அணியும் கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட செல்லவில்லை. மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தும் முயற்சியாக அண்மையில் ஜிம்பாப்வே அணியை வரவழைத்து அந்த அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நடத்தியது பாகிஸ்தான்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு முன்னணி அணிகளை பாகிஸ்தானில் விளையாட வைக்க தேவையான முயற்சியில் இறங்கியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். இதற்காக இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் முடிந்தவுடன் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளில் ஏதேனும் ஒன்று பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இருப்பதாக கூறப்படுகிறது
Related posts:
|
|