மீண்டும் பட் கம்மின்ஸ் ஹாட்ரிக் !

Sunday, June 23rd, 2024

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் T20 உலகக் கிண்ண போட்களில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை பட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

செயின்ட் வின்சென்ட்டில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் 16வது ஓவரின் முடிவில் 118 ஓட்டங்களை பெற்றிருந்த போதே வீழ்த்தப்பட்டது. எனினும், கடைசி ஐந்து விக்கெட்டுகளும் 30 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அரைசதம் கடந்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார்.

முன்னதாக சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியிலும் பட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார்.

இது அவரின் முதல் T20 உலகக் கிண்ண ஹாட்ரிக் விக்கெட்டாக அமைந்திருந்தது. இந்நிலையில், இரண்டாது முறையாகவும் அவர் இன்றையப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் T20 உலகக் கிண்ண போட்களில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை பட் கம்மின்ஸ் படைத்துள்ளமை குறிப்பிடத்’தக்கது

000

Related posts: