மீண்டும் தோல்வியைச் சந்தித்தது இலங்கை அணி!
Saturday, June 8th, 2024
2024 T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு 125 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பந்து வீச்சில் நுவான் துஷார நான்கு விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
10 அணிகளுக்குக் கிடைத்த முதற்தங்கம்!
மாகாண மட்ட கராத்தே சென்.ஜோன்ஸ் சாதனை!
ஆப்கானிஸ்தான் விக்கட் காப்பாளருக்கு எதிராக ஊக்க மருந்து குற்றச்சாட்டு!
|
|
|


