மீண்டும் தங்கம் வென்றார் டஃப்னே ஷிபேர்ஸ்!

இலண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான 200 மீற்றர் குறுந்தூர ஓட்டத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த, டஃப்னே ஷிபேர்ஸ் (Dafne Schippers) தங்கம் வென்றுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் சிப் போட்டியில், 21.63 செக்கனில் ஓடி போட்டி சாதனையுடன் தங்கம் வென்றிருந்த இவர், இந்த முறையும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில், பந்தய தூரத்தினை இவர் 22.07 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். 25 வயதான இவர் கடந்த முறை நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோல்வியை தவிர்க்க சிம்பாப்வே அணி போராட்டம்!
உலக கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு 25 வருடங்களின் பின்னர் வழங்கப்படும் பரிசு!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்...
|
|