மீண்டும் கேன் வில்லியம்சிற்கு Sir Richard Hadlee விருது!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் (Kane Williamson), 03ஆவது முறையாக ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’ (Sir Richard Hadlee) விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’(Sir Richard Hadlee) என்ற விருதை கேன் வில்லியம்சன் வென்றுள்ளார்.
இதனை அவர் மூன்றாவது முறையாக பெற்றுள்ளார். எனவே, 03 முறை ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’ விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ராஸ் டெய்லர் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா- மேற்கிந்திய முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்!
பங்களாதேஷ் அணிஅறிவிப்பு!
போட்டிகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் - குசலை வாழ்த்தும் பிரபலங்கள்!
|
|