மின்னல் வீரருக்க பின்னடை!
Monday, August 7th, 2017
உலக தடகள சம்பியன்ஸின் 100 மீற்றர் ஓட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று அதிர்ச்சியளித்தார் ஜெமெய்க்காவின் உசைன் போல்ட்.
உலகின் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசைன் போல்ட் உலக தடகள சம்பியன்ஸ் தொடருடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் பங்கேற்ற 100 மீற்றர் ஓட்டம் நேற்று (05) லண்டனில் நடைபெற்றது.
இதில் முதல் இரண்டு இடங்களையும் ஐக்கிய அமெரிக்க வீரர்கள் பெற்றுக்கொள்ள உசைன் போல்ட் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
ஜெஸ்டின் கெட்லின் முதலிடத்தையும் கிறிஸ்டியன் கொல்மன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
Related posts:
ஊக்கமருந்து மோசடி: ரஷ்ய வீரர்கள் ஏமாற்றி வந்ததாக குற்றச்சாட்டு!
ஜப்பான் அசத்தல் - செனகல் - ரஸ்யா வெற்றி!
லடாக் தாக்குதலின் எதிரொலி : IPL அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் நிர்வாகம்!
|
|
|


