மார்க் வுட் விளையாடுவதில் சந்தேகம்!

நியுசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாடுவது நிச்சியமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் விளையாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அவரது இடது முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அவருக்கு இன்று அல்லது நாளை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே அவர் காயம் காரணமாக நியுசிலாந்து உடனான முதலாவது போட்டியிலும் இணைக்கப்பட்டிருக்கவில்லை.
அவர் நியுசிலாந்துடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்கான குழாமிலும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் ஸ்கேன் பரிசோதனை அடிப்படையிலேயே இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரகானேயின் தந்தை கைது!
கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ணம் காலிறுதியில் பரீஸ் அணி!
ரொனால்டோ அபாரம்: சமநிலையில் முடிந்த ஸ்பெயின் - போர்த்துகல் மோதல்!
|
|