மலிங்க விளையாடலாம் – வைத்திய குழு தீர்மானம்!

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உபாதையிலிருந்து மீண்டு முழு உடல் தகுதியுடன் உள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்திய குழு உறுப்பினர் அர்ஜுன் த சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலிங்க இம்மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 தொடரில் விளையாடுவதற்கான முழு உடற் தகுதியுடன் உள்ளார், வைத்திய குழு சார்பில் அவர் விளையாடலாம் என்ற அறிக்கையை கிரிக்கெட் சபையிடம் ஒப்படைத்துள்ளோம். எனினும் தேர்வு குழு இலங்கை அணிக்குழாமை தெரிவுசெய்வதுடன், கிரிக்கெட் சபை இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பெல்ஜியத்தை புரட்டிப்போட்ட இத்தாலி!
டி வில்லியர்ஸின் எதிர்காலம் சந்தேகத்தில் ?
11 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர்!
|
|