மலிங்கா பதவி விலகியதால் பாதிப்பில்லை: திரிமன்னே!
Sunday, March 13th, 2016
இலங்கை டி20 அணியின் புதிய தலைவராக மேத்யூஸ் தெரிவு செய்யப்பட்டது பற்றி அந்த அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்திய தொடர் தோல்விகளால் நம்பிக்கை இழந்துள்ளது. இதனால் எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
இதற்கிடையில் அணித்தலைவராக இருந்த மலிங்கா தலைவர் பதவியில் இருந்து விலகியதும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மேத்யூஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தான் மனரீதியாக இந்த தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக திரிமன்னே கூறுகையில், ”மலிங்கா தலைவர் பதவியில் இருந்து விலகியது அணியில் எந்த ஒரு பின்னடைவையும் ஏற்படுத்தாது.
மேத்யூஸ் உடன் 3 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். நாங்கள் அனைவரும் ஒரே அணியில் தான் இருக்கிறோம். அவர் 2013ம் ஆண்டில் இருந்து தலைவராக செயல்படுகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
அதேபோல் சங்கக்காரா, ஜெயவர்த்தனே இல்லாததும் அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எப்போதும் அவர்கள் இல்லாததையே காரணம் காட்ட முடியாது. எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர்“ என்று கூறியுள்ளார்
Related posts:
|
|
|


