மருத்துவ நிபுணர்களின் கோரிக்கை நிராகரிப்பு!

Sunday, May 29th, 2016

பிரேசிலில் சிகா வைரஸ் பரவுகின்ற ஆபத்து காரணமாக ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றி வைப்பதை அல்லது ஒத்திவைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்ற மருத்துவ நிபுணர்களின் கோரிக்கையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்துள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நிறுத்திவிடுவதால் அல்லது இடத்தை மாற்றுவதால் சிகா வைரஸ் பரவுவதில் கணிசமான மாற்றம் எதுவும் உருவாக போவதில்லை என்று இது தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்திற்கு 150-க்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இணைந்து கூட்டாக எழுதிய பகிரங்க கடிதம் ஒன்றில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதில் சிகா வைரஸ் தொற்று பரவுகின்ற ஆபத்து மிக உயர்வாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

உலக சுகாதார அமைப்பு சிகா வைரஸ் வழிகாட்டுதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூளை கடுமையாக பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

Related posts: