மன்னிப்பு கோரினார் மரடோனா!
Saturday, July 7th, 2018
உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின் இங்கிலாந்து-கொலம்பிய அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது நடுவராகச் செயல்பட்ட அமெரிக்காவின் மார்க் கெய்ஜர் நேர்மை குறித்து சந்தேகம் எழுப்பிய ஆர்ஜென்டீனாவின் மரடோனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் நிர்ணயிக்கப்பட்டது. கொலம்பிய அணியின் வெற்றியை பறித்துவிட்டனர் என மாரடோனா நடுவரின் செயல்பாட்டை விமர்சித்திருந்தார். இதற்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தனது செயல்பாட்டுக்கு மரடோனா மன்னிப்பு கோருவதாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்துள்ளார்.
Related posts:
3 ஆம் இடத்தினை தனதாக்கியது கரவெட்டி பிரதேச செயலக அணி!
இன்னும் மிகப் பெரிய போட்டி காத்திருக்கிறது - இங்கிலாந்து அணித்தலைவர்!
இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி!
|
|
|


