மத்தியை வீழ்த்தி யாழ். இந்துக் கல்லூரி வெற்றி!
Sunday, June 3rd, 2018
17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் நடைபெற்ற துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தியது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 191 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. சைலரூபன் அதிகபட்சமாக 36 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் இயலரசன் 4 விக்கெட்டுக்களையும், கோமேதகன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்குக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 187 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்ததை அடுத்து 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது யாழ்ப்பாணம் இந்து. பந்துவீச்சில் அங்கவன் 5 விக்கெட்டுக்களையும், சாருயன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
Related posts:
விராட் கோலி முதலிடத்தில் !
கப்தில் சதம்: தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!
நியூசிலாந்து தொடர்: இந்திய அணி அறிவிப்பு..!
|
|
|


