மத்தியூஸுக்கு முன்கூட்டியே விடுமுறை!

Wednesday, January 25th, 2017

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் காலில் காயம் ஏற்பட்டது மட்டுமன்றி அவருக்கு முதல் குழந்தை பிறக்கவிருப்பதே தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் இடையில் நாடு திரும்புவதற்கு காரணம் என்று இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி மத்தியூஸ் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை திரும்பவிருந்ததோடு இலங்கை அணியில் உபுல் தரங்க மற்றும் குசல் ஜனித் பெரேராவை இணைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

இது பற்றி இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் சனத் ஜனசூரிய குறிப்பிடும்போது, “மாற்று வீரர்களாக யாரை அனுப்புவது என்பது பற்றி பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. மத்தியூஸுக்கு பதில் அனுபவ வீரர் ஒருவர் அணியில் இருக்க வேண்டும்” என்றார்.

இதன்படி இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுடனான மூன்றாவதும் கடைசியுமான இருபது20 போட்டிக்கு தினேஷ் சந்திமால் இலங்கை அணிக்கு தலைமை வகிக்கவுள்ளார்.

எனினும் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கு சந்திமால் அல்லது உபுல் தரங்கவை தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

எனினும் கடந்த திங்களன்று இடம்பெற்றிருக்கும் இலங்கை அணி தேர்வுக் குழுவினரின் பேச்சுவார்த்தையில் அணித் தேர்வில் இறுதி முடிவொன்று எட்டப்படவில்லை என்று தெரியவருகிறது.

அன்ஜலோ மத்தியூஸின் மனைவி விரைவில் குழந்தை பிறக்க இருந்ததால் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் இடையில் குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு திரும்ப மத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் சபையிடம் ஏற்கனவே விடுமுறை கோரி இருந்தார்.

எவ்வாறாயினும் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற போட்டியில் மத்தியூஸின் காலில் ஏற்பட்ட காயம் சுகம் பெற இரண்டு அல்லது மூன்று வாரங்கள் எடுப்பது மற்றும் தந்தையாகும் காரணமாக மத்தியூஸ் முன்கூட்டியே இலங்கைக்கு திரும்ப தீர்மானித்துள்ளார். இதற்கு இலங்கை கிரிக்கெட் சபையும் அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை காயம் காரணமாக தனுஷ்க குணதிலக்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோரும் இலங்கை திரும்புவதோடு அதற்கு பதில் ஜப்ரி வென்டர்சி ஏற்கனவே தென்னாபிரிக்கா நோக்கி சென்றுள்ளார்

mathews20160120

Related posts: