மகளிர் ரி 20 உலக வெற்றிக்கிண்ணத்தை 6 ஆவது முறையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியது!

Monday, February 27th, 2023

மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 6 ஆவது முறையாக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

எட்டாவது மகளிர் ரி 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நேற்று (26) நடைபெற்றது.

10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து அவுஸ்திரேலியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.

இதன்படி அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ஓட்டங்கள் பெற்றது.

இதையடுத்து 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் பெற்றது.

இதனால் அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கிண்ணத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை 6 ஆவது முறையாக அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: