ஐ.பி.எல் தொடர்:  ரஹானே அதிரடியில் வென்றது புனே!

Wednesday, May 18th, 2016

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் புனே அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் ஜாகீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ்அணியும் மோதின.

இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற புனே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டி காக்(2) மற்றும் ஐயர்(8) ஆகியோர் ஏமாற்றமளிக்க அடுத்து களமிறங்கிய நாயர் அணியின் நிலை உணர்ந்து விளையாடினார்.

43 பந்துகளில் 41ஓட்டங்கள் குவித்திருந்த அவர் ஸாம்பா பந்து வீச்சில் வெளியேற டெல்லி அணி மீண்டும் சரிவை சந்தித்தது. தொடர்ந்து வந்த வீரர்கள் எவரும் நிலைத்து நின்று ஆடத்தவறியதால் அந்த அணியால் 121 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதையடுத்து 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி துவக்கம் முதலே அதிரடிகாட்டியது. மழை குறுக்கிட்டதை அடுத்து டி.எல் முறைப்படி வெற்றி இலக்கினை நடுவர்கள் மாற்றி அமைத்தனர்.

36 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்து புனே அணியின் வெற்றிக்கு துணை நின்ற ரஹானே கடைசி வரை விக்கெட் இழக்காமல் நின்றார். அவருக்கு அடுத்து வந்த கவாஜா(19)மற்றும் பெய்லி(8) ஆகியோர் ரஹானேவுக்கு உறுதுணையாக நின்று 11 ஓவர்களில் இலக்கை அடைந்தனர்.

4 ஓவர்களில் 20 ஓட்டங்கள் விட்டுத்தந்து 3 விக்கெட்டை வீழ்த்திய டிண்டா ஆட்ட நாயகனாக தெரிவானார்.

Related posts: