மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் ஜூன் மாதம் ஆரம்பம்!
Friday, March 10th, 2017
மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான நிகழ்சி நிரலினை சர்வதேச மகளிர் தினத்தன்று சர்வதேச கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது.
இந்த 50 ஓவர்களைக்கொண்ட இந்த கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூன் மாதம் 24ம் திகதி முதல் ஜூலை மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. தகுதிபெற்றுள்ள அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இலங்கை ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஒரு குழுவிலும் அவுஸ்ரேலியா இங்கிலாந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து மற்றைய குழுவிலும் இடம்பெறுகின்றன
Related posts:
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் ரகுநாத்!
இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவு!
இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு !
|
|
|


