மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – தென் ஆபிரிக்க மகளிர் அணி 6 ஓட்டங்களால் வெற்றி !

Saturday, February 25th, 2023

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.

165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இதன்படி, இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியுடன் தென் ஆபிரிக்க மகளிர் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: