பெட்ரா கிவிடோவாவுக்கு ஆறுமாதங்கள் ஓய்வு!

கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன் பெட்ரா கிவிடோவா எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செக்குடியரசின் கிழக்கு பகுதியில் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் முன்னணி வீராங்கனையான கிவிடோவாவின் வீட்டினுள் கடந்த செவ்வாய்க்கிழமை நுழைந்த மர்பநபர் ஒருவர் கிவிடோவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தில் கிவிடோவாவின் கையில் பலத்த கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில் கிவிடோவாவுக்கு நான்கு மணிநேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் கிவிடோவாவின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
மேலும், ‘சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சந்தேகநபர் குறித்து கூறவேண்டுமாயின் அவர் மெலிந்த உருவமுடையவர். சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர். பழுப்பு நிறமான கண்கள். வெள்ளை நிறமானவர். கத்திக்குத்து தாக்குதல் நடத்தும் போது குறித்த நபர் கையில் ஏதோ பையுடன் இருந்தார்.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செக்குடியரசு வீராங்கனையான பெட்ரா கிவிடோவா கிராண்ட்ஸ்லம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸில் 2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|