பூப்பந்து சாம்பியன்ஸ் போட்டித் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை!
Tuesday, March 26th, 2019
ஆசிய இளையோர் பூப்பந்து சாம்பியன்ஸ் விளையாட்டுப் போட்டித் தொடரை இலங்கையில் முதன்முறையாக நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பூப்பந்து சம்மேளன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கொழும்பில் ஆசிய செம்பயின்சிப் பூப்பந்து இளையோர் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் இலங்கையில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்றதில்லை.
Related posts:
நாட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசு டில்ஷான் -சங்கா, மஹேல புகழாரம்!
அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்!
300 பந்துகளை 3 முறை சந்தித்து சண்டிமல் சாதனை!
|
|
|


