புதிய பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
அவரது பயிற்சியில் ஜூனியர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம், டெல்லியில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட்டை நியமிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து, அவர் 2 ஆண்டுகளுக்கு தலைவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாளை தனது புதிய பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்க உள்ளார்.
Related posts:
திரிமன்னே ஓய்வெடுக்க இது சரியான தருணம்- பிரபல வீரரின் கருத்து!
இந்திய அணியின் தலைவராக ரோஹிட் சர்மா!
2023 ஒருநாள் உலகக்கிண்ணம் - உத்தியோகபூர்வ சின்னம் வெளியானது!
|
|