பிரித்தானியப் பெண்களுக்கு முதலாவது தங்கம்!
Saturday, August 20th, 2016
நடைபெற்றுவரும் றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான ஹொக்கி இறுதிப் போட்டியில், 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் சம்பியனான நெதர்லாந்தை பெனால்டியில் தோற்கடித்த பிரித்தானியா, முதன்முறையாக ஒலிம்பிக்கின் பெண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது.
வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்களைப் பெற்றிருந்த நிலையில், வெற்றி பெறும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட பெனால்டியில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தே பெரிய பிரித்தானியா தங்கம் வென்றது. முன்னதாக வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் நியூஸிலாந்தை ஜேர்மனி தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.
Related posts:
டேரன் சமி நீக்கம்: டி20 அணியின் தலைவரானார் பிராத்வைட்!
துப்பாக்கிச் சுடும் போட்டி: இராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள்!
ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர்!
|
|
|


