பிபா உலகக் கிண்ணம்: சவுதியை துவம்சம் செய்த ரஷ்யா!

Friday, June 15th, 2018

21வது  பிபா உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபாரமாக வென்று தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

21வது பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறுகின்றன. 2014ல் நடந்த உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜேர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று 31 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதின. இதில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.பிபா உலகக் கிண்ண வரலாற்றிலேயே  உலகத் தரவரிசையில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் இரண்டு அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

குறிப்பாக போட்டியை நடத்தும் ரஷ்யா தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது. பிபா உலகக் கிண்ண போட்டியின் முதல் ஆட்டமே அசத்தலாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை மைதானத்தில் இருந்தவர்களை ரஷ்ய வீரர்கள் இருக்கையின் நுனியில் உட்கார வைத்து விட்டனர்.12வது நிமிடத்தில் காசின்கீ இந்த உலகக் கிண்ணத்தின் முதல் கோலை அடித்தார். 43வது நிமிடத்தில் செர்ரிஷேவ் கோலடிக்க முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையில் ரஷ்யா இருந்தது.

அதன்பிறகு டிசூபா 71வது நிமிடத்தில் கோலடிக்க ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆட்டம் முடிவதற்கு கடைசி நிமிடம் இருக்கையில் செர்ரிஷேவ் மற்றொரு கோலை அடித்தார்.சில விநாடிகளே இருந்த நிலையில் கோலோவின் அணியின் 5வது கோலை அடித்தார்.

இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபாரமாக வென்றது. இந்த உலகக் கிண்ணத்தின் முதல் கோல் முதல் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் ஏ பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Russia Soccer team 318

Related posts: