பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி!

Friday, August 3rd, 2018

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் ஒழுங்கமைத்து நடத்தும் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது தற்போது நடைபெற்று வருகின்றது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.45 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கே.றம்மிநாதன் 24 ஓட்டங்களையும் எஸ்.பக்ஸன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரி.விதுசன் 3 விக்கெட்களையும் ஆர்.இயலரசன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.பதிலளித்தாடிய யாழ்;ப்பாணம் மத்திய கல்லூரி அணி 45 ஓவர்களில் 7 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஆர்.ராஜ்கிளிண்டன் 28 ஓட்டங்களையும் கே.இயலரசன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் அணி சார்பாக றெனால்டோ 3 விக்கெட்களையும் டிலக்சன், றெமிஸ்ரன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related posts: