பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 05 ஆண்டுகள் தடை!

சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லாடித் இற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிபி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீ்க் T20 போட்டிகள் நடத்தப்படுகிறது. இரண்டாவது சீசன் கடந்த பெப்ரவரி 9ம் திகதி முதல் மார்ச் 5ம் திகதி வரை நடந்தது. இத்தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சார்பில் விளையாடிய காலித் லாடிப் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு பிசிபி ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தில் நடந்து வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஐந்து ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதே போன்று சக வீரரான ஷர்ஜீல் கானுக்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
Related posts:
இறுதி போட்டியில் சானியா ஜோடி தோல்வி!
அபார பந்துவீச்சு : முக்கொணத்தொடரை வென்றது இலங்கை கனிஷ்ட அணி!
T 20 தொடரில் விளையாட அனுமதி மறுப்பு : பாகிஸ்தான் கிரிக்கட் சபை அதிரடி!
|
|