பராசூட் சாம்பியன்ஷிப் போட்டியில் கைக்கு3 தங்கப்பதக்கங்கள்!
Tuesday, September 12th, 2017
18ஆது ஆயுதப்படைகளுக்கான பராசூட் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஐக்கிய இராச்ச்சியத்தின் பிரிட்டிஷ் இராணுவப் பராசூட் அமைப்பின் டிராப் வலயத்தில் அண்மையில் நிறைவுற்ற இந்த போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வின் அனைத்து திறந்த பிரிவு பரிசூட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் சிவில் மற்றும் சர்வதேச இராணுவ குழுக்கள் கலந்துகொள்ள முடியும். குறித்த போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், ஐக்கிய இராச்ச்சிய இராணுவத்தை சேர்ந்த ரெட் டெவில் உட்பட ரோயல் கடற்படை, ரோயல் விமானப்படை ஆகியவருடன் இலங்கை இராணுவ பரிசூட் குழுவினர் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கோல்டன் நைட் ஆகிய படைபிரிவுகள் உள்ளிட்ட சுமார் 300 க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை இராணுவ அணியினர் முதன்முதலாக வெளிநாடு ஒன்றில் பரிசூட் காட்சிகள் மூலம் தமது திறமையினை வெளிக்காட்டி தங்கப்பதக்கங்களை வெற்றிகொண்டமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|
|
|


