பதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை விபரம்!

சர்வதேச கிரிகெட் பேரவை வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 3வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். இந்த சாதனையை எட்டிய 4 வது இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆவார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 வது இடதில் உள்ளார். முதலிடத்தில் இருந்த மற்றொரு இங்கிலாந்து வீரரான ஸ்டூவர்ட் ப்ரோட் 3 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
அஸ்வினுக்கு அடுத்தபடியாக இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 6 வது இடத்தில் உள்ளார். இலங்கை பந்துவீச்சாளர்களான ரங்கன ஹேரத் 13 வது இடத்திலும் நுவான் பிரதீப் 5 இடங்கள் முன்னேறி 43வது இடத்தையும், மிலின்ட சிறிவர்த்தன 13 இடங்கள் முன்னேறி 50 வது இடத்தையும் பிடித்துள்ளனர். துடுப்பாட்ட தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் அடுத்த 2 மற்றும் 3 வது இடங்களில் உள்ளனர். இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சன்திமல் 19வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் இங்கிலாந்து வீரரான அலாஸ்டர் குக் தொடர்ந்து 15 வது இடத்தில் உள்ளார்.
சகலதுறை தரவரிசையில் இந்திய அணியின் அஸ்வின் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|