பதக்கப்பட்டியலில் சீனாவை பின்தள்ளிய பிரித்தானியா!
Wednesday, August 17th, 2016
நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
26 தங்கம், 23 வெள்ளி, 26 வெண்கலம் என அமெரிக்கா 75 பதக்கங்களுடன் உச்சத்தில் உள்ளது.முன்னதாக முதல் இடம் பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சீனாவுக்கு தற்போது இரண்டாம் இடத்துக்கே போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது சீனா 15 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பிரித்தானியா 16 தங்கம், 17 வெள்ளி, 8 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதக்கப்பட்டியல் விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

Related posts:
பயிற்சிக் குழாமிலிருந்து உமர் அக்மால் நீக்கம்!
யூரோ கிண்ணம்: “நாக்- அவுட்” சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!
இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்!
|
|
|


