பதக்கங்களை விற்பனை செய்ய முடியாதவாறு புதிய சட்டம்

Thursday, June 8th, 2017

விளையாட்டுத்துறை வீரர்கள் தங்களது நாட்டின் சார்பாக பெறுகின்ற பதக்கங்களை விற்பனை செய்யவோ, ஏலத்தில் விடவோ முடியாதவாறு புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக விளையாட்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்இலங்கை சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற சுசந்திகா ஜெயசிங்க, வறுமை காரணமாக தமது பதக்கத்தை விற்பனை செய்யவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்

இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்

Related posts: